வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே உள்ள வடக்கு காடு 1-வது வார்டு அவ்வையார் மேடு பகுதியை சேர்ந்தவர் அருள். விவசாயி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 21). இவர் தனது தாய், சகோதரி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலுக்கு சென்றனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவர்களை வழிமறித்தனர். மேலும் 3 பேர் கும்பல் அருகில் கடைகளில் இருந்த பாட்டில்களை எடுத்து உடைத்து, நாங்கள் ரவுடி எனக்கூறி கத்தியை காட்டி மிரட்டி, மணிகண்டனின் மோட்டார் சைக்கிள், அவரது சகோதரியிடம் இருந்த 3 கிராம் தங்கத்தோடு ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆத்தூரை சேர்ந்த மாரிமுத்து (24), ஈரோடு மாவட்டம் பெரிய சேம்பூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திர மூர்த்தி (23), காளிங்கராயன்பாளையம் பகுதிைய சேர்ந்த தேவா (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.