தூத்துக்குடியில் 3 பேருக்கு கத்திக்குத்து


தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 3 பேரை கத்தியால் குத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி பூப்பாண்டியாபுரம் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் மூக்கையன். இவருடைய மகன் அழகுமுத்து (வயது 41). இவருக்கும், இவரது உறவினர் பூப்பாண்டியாபுரம் குமரன்நகரை சேர்ந்த பெரியசாமி மகன் சாலையப்பன் (38) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 09.10.2022 அன்று அழகுமுத்து, தூத்துக்குடி பூப்பாண்டியாபுரம் குமரன் நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் முருகன் (29), தூத்துக்குடி சங்கரப்பேரியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் (37) ஆகிய 3 பேரும் தாளமுத்துநகர் பூப்பாண்டியாபுரம் பகுதியில் உள்ள ஒரு கியாஸ் குடோன் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சாலையப்பன் அவர்களிடம் தகராறு செய்து 3 பேரையும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதுகுறித்து அழகுமுத்து அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குபதிவு செய்து சாலையப்பனை கைது செய்தார். இவர் மீது நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story