வாலிபரிடம் பணம் பறித்த 3 பேர் கைது
நெல்லையில் வாலிபரிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
நெல்லை பழையபேட்டையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 29). இவர் கடந்த 30-ந் தேதி தாழையூத்து பகுதியில் வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள், ரூ.1,200-ஐ பறித்துக் கொண்டும், ஜி.பே. மூலம் ரூ.20 ஆயிரத்து 100 அனுப்ப சொல்லி மிரட்டியதால் பணத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வகுமார் அண்ணன் மகாராஜன் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் தாழையூத்தை சேர்ந்த பத்மநாதன் (25), பிலிம்பீட்டர் (28), சசிகுமார் (29) ஆகியோர் பணம் பறித்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார், 3 பேரையும் நேற்று கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story