மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

நெல்லையில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலாமடை பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்ற மேலப்பாலாமடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது மதுபாட்டில்கள் விற்றதாக தாழையூத்து பசும்பொன் நகரை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 19 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை மாநகர பகுதியில் சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது மதுபாட்டில்கள் விற்றதாக வல்லநாடு பகுதியை சேர்ந்த மகேஷ் (50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story