மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அய்யம்பாளையம் டாஸ்மாக் கடை பின்புறம் ராமநாதபுரம் மாவட்டம் மேலையூர் பகுதியை சேர்ந்த அங்குசாமி (வயது 34), மூலமங்கலம் பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் நொய்யல் குறுக்குச்சாலை பங்களா நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் (34), புகழூர் நகராட்சிக்கு சொந்தமான கார் நிறுத்தம் அருகே உள்ள கழிவறை பகுதியில் காந்திநகர் பகுதியை சேர்ந்த ராஜாகண்ணு (60) ஆகியோர் அதிக விலைக்கு மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த தலா 10 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story