மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோகைமலை பஸ் நிலையம் பகுதிகளில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 62), சண்முகம் (52), காவல்காரன்பட்டி டாஸ்மாக் பார் அருகே தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (37) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story