கள்ளக்குறிச்சியில் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்து விற்ற 3 பேர் கைது


கள்ளக்குறிச்சியில் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்து விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்து விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் அரசு அனுமதியின்றி நாட்டு வெடி மற்றும் வானவெடி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாய்க்கால் மேட்டுத்தெருவில் ஒரு வீட்டை சோதனை செய்தபோது, அங்கு நாட்டு வெடி மற்றும் வானவெடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நாட்டு வெடி மற்றும் வானவெடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சோ்ந்த யுசூப்ராவுத்தர் மகன் கனி (வயது 23), அமீது மகன் இப்ராஹிம் (35), ஷேக் தாவூத் மகன் ஷபியுல்லா (48) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நாட்டு வெடிகள் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story