மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

வந்தவாசியில் மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வந்தவாசியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்த அமுல் (வயது 35), பொட்டிநாயுடு தெருவை சேர்ந்த மாபுபாஷா (64), புதிய பஸ் நிலையம் அருகே பிரேம்குமார் (38) ஆகிய 3 பேர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story