புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 5:42 PM IST)
t-max-icont-min-icon

போடியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். விசாரணையில் அவர்கள் குலசேகர பாண்டியன் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 58), புதுக்காலனியை சேர்ந்த வாசியப்பன் (68), தெற்கு ராஜ வீதியை சேர்ந்த மீனாம்பிகை (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 23 பாக்கெட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story