புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையம் எதிரில் ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த கடையில் இருந்த சரவணக்குமார் (வயது 32) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் டவுன் போலீசார் சித்துராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள கண்ணன் (36) என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் கண்ணணை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் ஏழாயிரம்பண்ணை, இ.ரெட்டியாபட்டி, கரிசல்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினார். அப்போது கரிசல்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ஜீவா (வயது50) என்பவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story