செல்போன்கள் பறித்த 3 பேர் கைது
செல்போன்கள் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 40). இவர் சம்பவத்தன்று திருச்சி மத்திய பஸ்நிலையம் பகுதியில் கோவை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அங்கு வந்த தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்த அஜய்(22), நாகப்பட்டினம் செம்பியான்மாதேவி பகுதியை சேர்ந்த விவேகானந்தன்(31), திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ரகுமான்(20) ஆகியோர் கருப்பையா மற்றும் அவரது அருகில் இருந்த வெள்ளைச்சாமியிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போன்களை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்கள் பறித்து சென்ற 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story