ஆலையில் பட்டாசுகள் திருடிய 3 பேர் கைது
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பட்டாசுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பட்டாசுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டாசு ஆலை
சிவகாசி புதுரோட்டை சேர்ந்தவர் தனபால் மகன் கார்த்திகேயன் (வயது 38). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள சின்னகாமன்பட்டி- பெத்துலுப்பட்டி சாலையில் அமைந்துள்ளது.
இந்த பட்டாசு ஆலையில் கடந்த மாதம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் திடீர் ஆய்வு செய்த போது அங்கு அதிக அளவில் தொழிலாளர்களை வைத்து பட்டாசு உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஆலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
3 பேர் கைது
இந்தநிலையில் பூட்டி இருந்த பட்டாசு ஆலையில் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து கார்த்திகேயன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாபு (வயது 30), சரண் (29), மாரிமுத்து என்கிற அறிவு (32) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாபு, சரண், மாரிமுத்து ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.