கடலூர் அருகேதனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திருடிய 3 பேர் கைது2 டன் இரும்பு பொருட்கள் பறிமுதல்
கடலூர் அருகே தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்ததோடு,. லாரியில் கடத்தி வரப்பட்ட 2 டன் இரும்பு பொருட்களயைும் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம்,
புதுச்சத்திரம் போலீசார் நேற்று கடலூர் அடுத்த துள்ளாமேடு பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி, சோதனை செய்தபோது, அதில் புதுச்சத்திரம் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து இரும்பு பொருட்களை திருடி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து லாரியில் வந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வைரங்கப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சண்முகவேல் (வயது 29), காயல்பட்டை சேர்ந்த காசிநாதன் மகன் வடிவேல் (37), சுனாமி நகரை சேர்ந்த செல்வகுமார் (52) ஆகியோர் என்பதும், தனியார் ஆலையில் இருந்து 2 டன் இரும்பு பொருட்களை திருடி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 டன் இரும்பு பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது.