அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது
அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது
கபிஸ்தலம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
மோட்டார்சைக்கிள் பறிமுதல்
கபிஸ்தலம் போலீஸ் சரக பகுதிகளில் பாபநாசம் துைண போலீஸ் சூப்பிரண்டு பூரணி மேற்பார்வையில் கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், முத்துக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்ேபாது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கீழ கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்த கார்த்திகேயன்(வயது26) என்பதும், கபிஸ்தலம் காவிரி ஆற்றில் இருந்து அனுமதி இன்றி மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையில் மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
இதேபோல் கபிஸ்தலம் அருகே உள்ள நாயக்கர்பேட்டை பாரதிநகரில் வசிக்கும் வடிவேல்(40), குணச்செல்வன்(42) ஆகியோர் காவிரி ஆற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் அள்ளி வந்து, ஆற்றுகரையில் சேமித்து வைத்திருந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேல், குணச்செல்வன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.