பொதுமக்களை மிரட்டிய 3 பேர் கைது


பொதுமக்களை மிரட்டிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களை மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் ஜானகிபுரம், பிடாகம் பகுதிகளில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசிங்கம், புனிதவள்ளி ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உருட்டுக்கட்டையுடன் நின்றுகொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக வேலியம்பாக்கத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 38), ராமதாஸ் (35), ஹரிபிரசாத் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story