விபத்தில் 3 பேர் காயம்
விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
விருதுநகர்
சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (வயது 31). இவர் தனது மனைவி ஆதிலட்சுமி (36), மகன் சித்தார்த் (4) ஆகியோருடன் சாத்தூர்-கோவில்பட்டி மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த பார்த்திபன் (34) என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கணவன், மனைவி, மகன் 3 பேருக்கும் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து பார்த்திபன், சாத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story