மது விற்ற 3 பேர் சிக்கினaர்


மது விற்ற 3 பேர் சிக்கினaர்
x
தினத்தந்தி 8 Aug 2023 1:30 AM IST (Updated: 8 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 3 பேர் போலீசார் கைது செய்தனர்.

தேனி

கடமலைக்குண்டு டாஸ்மாக் கடை அருகே சிலர் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அந்த டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்றதாக அதே ஊரை சேர்ந்த பாண்டியன் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மயிலாடும்பாறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மயிலாடும்பாறை நேருஜிநகர் பகுதியில் மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த பிரபு (34) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரியகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் போலீசார் கீழவடகரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கீழவடகரை ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் காரில் வைத்து மதுவிற்ற தெய்வேந்திரபுரத்தை சேர்ந்த தங்கபாண்டி (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 43 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story