கஞ்சா விற்ற 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா விற்ற 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கரூர் நகரப்பகுதியில் கஞ்சா விற்ற அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கரூர்

3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கரூர் மொச்ச கொட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது41), தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிக்குட்பட்ட மல்லிங்கர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (31), அவரது தம்பி ரூபன் (21) ஆகிய 3 பேரும் கரூர் நகரப் பகுதிகளில் கஞ்சா விற்று வந்தனர். இதையடுத்து 3 பேரையும் கரூர் நகர போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.

இதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறுகையில், சட்ட விரோதமாக கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், அரசு அனுமதியில்லாமல் மது விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story