ரவுடியை கொலை செய்ய முயன்ற 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரவுடியை கொலை செய்ய முயன்ற 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியில் பிரபல ரவுடி ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் டக்லஸ் (வயது 29), ஜான் எமிலின் கிறிஸ்டோபர் (23), அன்சாரி (28) ஆகியோர் பாலக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் ஜான் எமிலின் கிறிஸ்டோபர் மீது காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, வழிப்பறி வழக்கு உள்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 3 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்கள் என்பதால் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story