சேவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேவூர்,
சேவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம் திருட்டு
சேவூர் அருகே மங்கரசுவலையபாளையம் கிருஷ்ணபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் கடந்த 3-ந்தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சேவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சேவூர் மங்கரசுவலையாபாளையம் தண்ணீர்பந்தல் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் சேவூர் அருகே புதுச்சந்தையை சேர்ந்த புக்கான்மூர்த்தி (வயது 45), வையாபுரிகவுண்டன் புதூரைச் சேர்ந்த பீட்டர் ராஜேந்திரன் (40), மங்கரசுவலையாபாளையத்தைச் சேர்ந்த சண்டி என்கிற கருப்புசாமி (38) என்றும், இவர்கள் 3 பேரும் ராமசாமி வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.