டி.என்.பாளையம் அருகே தந்தை-மகனை தாக்கிய 3 பேர் கைது
டி.என்.பாளையம் அருகே தந்தை-மகனை தாக்கிய 3 பேர் கைது
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே உள்ள அரக்கன் கோட்டை மோதூரை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் ரங்கநாதன் (வயது 38). நேற்று காலை ரங்கநாதன் வேலைக்கு செல்வதற்காக மோதூர் பிரிவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் ஜவகர் (24), நந்தகுமார் (25), பிரதாப் என்கிற வேல்முருகன் (29), ஆறுமுகம் (38) ஆகியோர் செல்போனில் தகாத வார்த்தையில் பேசிக்கொண்டு இருந்தனர். பெண்கள் நடந்து செல்லும் வழியில் நின்றுகொண்டு ஏன் இப்படி தகாத வார்த்தை பேசுகிறீர்கள்? என்று நடராஜ் கேட்டார். அதற்கு 4 பேரும் ஆத்திரமடைந்து நடராஜை தாக்கியுள்ளனர். அதை தடுக்க வந்த ரங்கநாதனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த தந்தை, மகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவகர், பிரதாப், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நந்தகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.