வாலிபரை கல்லால் தாக்கிய 3 பேர் கைது
மதுரையில் வாலிபரை கல்லால் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் வாலிபரை கல்லால் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹெல்மெட் மாயம்
மதுரை உத்தங்குடி உலகனேரியை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 26). சம்பவத்தன்று இவர் நண்பர்களுடன் உத்தங்குடி அம்மச்சி அம்மன் கோவில் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அவரது ஹெல்மெட்டை காணவில்லை.
அப்போது அந்த இடத்தில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களிடம் ெஹல்மெட் மாயமானது குறித்து விசாரித்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த அவர்கள் ஆத்திரத்தில் பழனிக்குமார் மற்றும் அவரது நண்பர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கினர்.
3 பேர் கைது
மேலும் பழனிக்குமாரின் மோட்டார் சைக்கிளையும் உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து அவர் புதூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் உத்தங்குடி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சசிகுமார் (24), உத்தங்குடி சோலைமலை நகர் சரவணன் (22), உத்தங்குடி ரைஸ்மில்தெரு அஜித் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் பிரபாகரன், கணபதி ஆகியோரை தேடி வருகிறார்கள்.