மான் வேட்டையாடிய 3 பேர் கைது
போளூர் அருகே மான் வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
போளூர்
போளூர் அருகே மான் வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ரோந்து பணி
திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர்அருண்லால் உத்தரவின் பேரில் போளூர் வனச்சரக அலுவலர் ஆர்.குமார் தலைமையில், வனவர்கள் சிவகுமார், சந்திரசேகரன் மற்றும் வனக்காப்பாளர்கள் அல்லியாளமங்கலம் காப்புக்காடு, அல்லிக்கட்டை சரகத்தில் காடு ஆகிய பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டில் பெண் புள்ளிமானை, நாட்டு துப்பாக்கி மூலம் வேட்டையாடி, அதனை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் தேவிகாபுரத்தை சேர்ந்த ரவி மகன் சிவா (வயது 27), போளூரை சேர்ந்த கோபி மகன் சாம்சன் (26), கிளியனூரை சேர்ந்த கோட்டு பாண்டியன் மகன் அரி (25) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேட்டையாடப்பட்ட பெண் புள்ளி மானை கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து, காட்டில் புதைத்தனர்.