ரேஷன் அரிசி கடத்திய 3 பேருக்கு அபராதம்- நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
ரேஷன் அரிசி கடத்திய 3 பேருக்கு அபராதம் விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தியதாக கடந்த 2020-ம் ஆண்டு நாங்குநேரியை சேர்ந்த சுடலைக்கண்ணு, 2021-ம் ஆண்டு ஆலங்குளத்தை சேர்ந்த நடராஜன், 2022-ம் ஆண்டு நெல்லை டவுனை சேர்ந்த முன்னா முகமது ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, சுடலைக்கண்ணுக்கு 12 நாட்கள் சிறை மற்றும் ரூ.1000-ம், நடராஜனுக்கு ரூ.1,500-ம், முன்னா முகமதுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story