லோடு ஆட்டோவை வழிமறித்து மிரட்டல் விடுத்த 3 பேர் கைது


லோடு ஆட்டோவை வழிமறித்து மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
x

லோடு ஆட்டோவை வழிமறித்து மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

மேலச்செவல் தெற்கு ரதவீதி முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் திருமலைநம்பி (வயது 47). இவர் நேற்று முன்தினம் மினி லோடு ஆட்டோவில் வாகனத்தில் மேலச்செவலில் இருந்து வீரவநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பத்தமடை மெயின்ரோட்டில் நான்கு பேர் வாகனத்தை வழிமறித்து திருமலை நம்பியை ஆயுதத்தால் தாக்க முயன்றும், கையால் குத்தி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து திருமலைநம்பி பத்தமடை போலீஸ் நிலையத்தில்அளித்த புகாரின் பேரில் சேரன்மாதேவி இன்ஸ்பெக்டர் சுபாஷ்ராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் திருமலை நம்பியை வழிமறித்து தாக்கியது பத்தமடையை சேர்ந்த மணிகண்டன் (22) உள்ளிட்ட 3 பேர் என்பது தெரியவந்தது. மூன்று பேரையும் பத்தமடை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மற்றொருவரை பத்தமடை போலீசார் தேடி வருகின்றனர்


Next Story