நிதி நிறுவன உரிமையாளரை வழிமறித்து 3 பவுன் சங்கிலி பறிப்பு


நிதி நிறுவன உரிமையாளரை வழிமறித்து 3 பவுன்  சங்கிலி பறிப்பு
x

மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற நிதி நிறுவன உரிமையாளரை வழி மறித்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற நிதி நிறுவன உரிமையாளரை வழி மறித்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நிதி நிறுவன உரிமையாளர்

மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு நடுத்தேரி விளையை சேர்ந்தவர் லினட் (வயது46). இவர் மருதங்கோடு சந்திப்பில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

அப்போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும் 2 பேரும் திடீரென்று லினட்டின் மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர்.

நகை பறிப்பு

அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த நபர் கீழே இறங்கி லினட்டின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதில் லினட் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் 2 மர்ம நபர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர்.

இதற்கிடையே படுகாயம் அடைந்த லினட்டை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மர்ம நபர்களையும் தேடி வருகிறார்கள்.

மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story