பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x

ஆற்காடு அருகே பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா சென்னசமுத்திரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதி (வயது 32). இவர் ஆற்காடு அடுத்த மாங்காடு கூட்ரோட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை மாலதி வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். கம்பெனி அருகே நடந்து சென்றபோது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் மாலதியின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து மாலதி ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story