மொபட்டில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு


மொபட்டில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிக்கப்பட்டது.

விழுப்புரம்

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுபேட்டையை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் மனைவி கோடீஸ்வரி. இவர், தனது தங்கையுடன் மொபட்டில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஊரல், பட்டணம் கிராமத்துக்கு இடையே வந்தபோது, தலைக்கவசம் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென கோடீஸ்வரி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story