வாலிபரிடம் பணம் பறித்த 3 ரவுடிகள் கைது
சேலத்தில் வாலிபரிடம் பணம் பறித்த 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
சேலத்தில் வாலிபரிடம் பணம் பறித்த 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர், நேற்று முன்தினம் களரம்பட்டி பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அவரை பிரபல ரவுடி சூரியின் மகன் ஜீசஸ், இளையராஜா (31), செல்வகுமார் (28) ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,500-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகளான ஜீசஸ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story