2023-2024-ம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரத்து 442 கோடி கடன் வழங்க இலக்கு


2023-2024-ம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரத்து 442 கோடி கடன் வழங்க இலக்கு
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 2023-2024-ம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரத்து 442 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 2023-2024-ம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரத்து 442 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்தார்.

கடன் திட்ட அறிக்கை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில் நபார்டு வங்கி ஆண்டு கடன் திட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் கடனுதவிகள் மற்றும் நபார்டு வங்கி ஆண்டு கடன் திட்ட அறிக்கையை வெளியீட்டு மாவட்ட கலெக்டர் லலிதா பேசியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மாவட்ட தொழில் மையம் நமது மாவட்டத்தில் தொடங்கப்பட்ட உடன் அதிகமாக கடனுதவி வழங்கப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றன. மகளிர் திட்டம் சார்பில் கடந்த ஆண்டு ரூ.300 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்

இந்தாண்டு ரூ.500 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. தற்போது தாட்கோ அலுவலகமும் இங்கு செயல்படுகிறது. வளர்ந்த மாவட்டத்தை நோக்கி பயனிக்கிறோம். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும். இங்கு கடன் பெற்ற பயனாளிகள் உங்கள் தொழில் வளத்தை பெருக்கி பெற்ற கடனை திருப்பி செலுத்த வேண்டும். நீங்கள் வங்கிகளுக்கு சிறந்த வாடிக்கையாளராக இருக்கவேண்டும். வங்கியில் பெற்ற கடன் மூலம் லாபத்தை ஈட்டி உங்கள் குடும்பம் மட்டும் இல்லாமல் உங்களை சுற்றி உள்ளவர்களும் வளர வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். உங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

ரூ.3 ஆயிரத்து 442 கோடி கடன்

மேலும் நபார்டு வங்கியின் மூலம் நமது மாவட்டத்திற்கு 2023-2024-ம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரத்து 442 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பல்வேறு வங்கிகளின் சார்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் பழனி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், நபார்டு வங்கி உதவி மேலாளர் அனிஸ், தாட்கோ பொது மேலாளர் சுசீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story