சரக்கு வேன்களில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சரக்கு வேன்களில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

சரக்கு வேன்களில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரம் வேங்கிடகுளத்தில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ேசாதனையில் சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கறம்பக்குடி தாலுகா பொன்னன்விடுதி மணக்கொல்லையை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மணிகண்டன் (வயது 23), ஆலங்குடி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த ரமேஷ் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, ஒரு டன் அரிசி, சரக்கு வேன், செல்போன், ரூ.4,700 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த வேங்கிடகுளத்தை சேர்ந்த தமிழரசன் மகன் வெங்கடாசலம் (35) என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசி, செல்போன், ரூ.2,670, சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story