அனுமதி இன்றி எம்-சாண்ட் மணல் ஏற்றி வந்த 3 டிராக்டர்கள் பறிமுதல்


அனுமதி இன்றி எம்-சாண்ட் மணல் ஏற்றி வந்த 3 டிராக்டர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே அனுமதி இன்றி எம்-சாண்ட் மணல் ஏற்றி வந்த 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராம பகுதியில் தனியார் மூலம் சோலார் மின்உற்பத்தி பணி நடந்து வருகிறது. அந்த மின்உற்பத்தி நிறுவனத்திற்கு நேற்று அனுமதி இன்றி டிராக்டர் மூலம் எம்-சாண்ட் மணல் கொண்டு வரப்படுவதாக புகார் வந்தது. உடனே ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, 3 டிராக்டர்களை சோதனை செய்ததில் உரிய அனுமதி இன்றி எம்-சாண்ட் மணல் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் இசக்கிமுருகேஸ்வரி புகாரின் பேரில் டிரைவர்கள் சுதன், சிவக்குமார், ஆனந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story