3 லாரிகள் பறிமுதல்
மண், ஜல்லிக்கற்கள் ஏற்றிய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் உத்தமபாண்டியன்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை வழிமறித்து சோதனை நடத்தினர். இதில், சட்ட விரோதமாக 2 லாரிகளில் எம்.சாண்ட் மண் மற்றும் ஒரு லாரியில் ஜல்லி கற்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து லாரி டிரைவர்களான கீழ முன்னீர்பள்ளம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 48), மணக்காடு அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (38), புதுமனையைச் சேர்ந்த சுல்தான் (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 டன் எம்.சாண்ட், 3 டன் ஜல்லி கற்களுடன் 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story