நாமக்கல் அருகே தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல்


நாமக்கல் அருகே தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல்
x

நாமக்கல் அருகே தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வட்டார போக்குவரத்து துறையினருக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையிலான குழுவினர் நேற்று புதன்சந்தை, சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 2 மினி லாரிகள், ஒரு வேன் என 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சாலைவரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 பொக்லைன் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டது.


Next Story