நகை, பணம் திருடிய 3 பெண்கள் கைது
நகை, பணம் திருடிய 3 பெண்கள் கைது
விருதுநகர் மாவட்டம், சின்னசெட்டிபட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 32). இவர் அரசு டவுன் பஸ்சில் பெரியார் பஸ்நிலைத்திற்கு சென்றார். அப்போது அவர் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை 2 பெண்கள் திருடினர். உடனே அந்த பெண்களை அங்கிருந்தவர்கள் உதவியுடன் பிடித்து தெற்குவாசல் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் வெளிச்சநத்தம் மகரஜோதி மனைவி ஜோதிமணி (40). மகாலிங்கம் மனைவி ஜெயந்தி (47) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மதுரை பைகாரா, விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் மேனகா(35). இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி அழகப்பன்நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அவர் வைத்திருந்த மணிபர்சை அருகில் இருந்த பெண் திருடினார். உடனே அந்த பெண்ணை பிடித்து சுப்பிரமணியபுரம் போலீசில் ஒப்படைத்தார். அந்த பர்சில் 6 கிராம் தங்க டாலர், 4,500 ரூபாய் இருந்தது. பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது அவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த ஜம்புலிபுதூர் கிராமத்தை சேர்ந்த முத்துசெல்வம் மனைவி பிரியா (24) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.