3 பெண்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை


3 பெண்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை
x

3 பெண்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி

மணப்பாறை:

புதுக்கோட்டை மாவட்டம், மலைக்குடிப்பட்டி அருகே உள்ள சீத்தபட்டியை சேர்ந்த மகேஸ்வரி(வயது 22) என்பவர் கடந்த மாதம், தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மாமியாருடன் மகனை அழைத்துக் கொண்டு பஸ்சில் மணப்பாறைக்கு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது மகேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் மதிப்புள்ள நகையை தாலி கயிருடன் திருடியதாக 3 பெண்களை பிடித்து மணப்பாறை போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டதாக சின்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா(28), ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த காமாட்சி(40), அலமேலு அம்மாள்(40) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழக்கப்பட்டது. இதில் 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.


Next Story