வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
x
திருப்பூர்

தளி:

உடுமலை காந்திநகர் என்.எஸ். லே-அவுட்டை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 34). இவரது கணவர் ஞானசுந்தரம் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். ஆனந்தி கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள டெய்லர் கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஆனந்தி அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்துச்சென்றுவிட்டார். இது குறித்து ஆனந்தி உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்த புருசோத்தமன் (31) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு உடுமலை ஜே.எம்.எண்-1 கோர்ட்டில் நடைபெற்று வந்தது. புகார்தாரருக்கு ஆதரவாக அரசு தரப்பில் அரசு வக்கீல் அருண்பாண்டியன் ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார். தற்போது புருசோத்தமனை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் மாஜிஸ்திரேட்டு விஜயகுமார் தீர்ப்பு வழங்கினார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story