விளையாடி ெகாண்டிருந்த 3 வயது சிறுமியிடம் நகை பறிப்பு


விளையாடி ெகாண்டிருந்த   3 வயது சிறுமியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குறும்பனையில் திருமண மண்டபம் முன்பு விளையாடி ெகாண்டிருந்த 3 வயது சிறுமியிடம் ஒரு பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குளச்சல்,

குறும்பனையில் திருமண மண்டபம் முன்பு விளையாடி ெகாண்டிருந்த 3 வயது சிறுமியிடம் ஒரு பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

விளையாடிய சிறுமி

குளச்சல் அருகே உள்ள கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஹென்றி ஆஸ்டின் (வயது37). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி டெனிலா (33). இவர் நேற்று முன்தினம் தனது 3 வயது மகள் இவாலினாவுடன் குறும்பனையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு சென்றார்.

அங்கு மதிய வேளையில் சிறுமி இவாலினா திருமண மண்டபத்தின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் திருமண மண்டபத்தின் முன்பு உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மண்டபம் நோக்கி நடந்து வந்தார்.

நகை பறிப்பு

அந்த வாலிபர் திடீரென விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் சிறுமி சத்தம் போட்டு அழுதார். இதை பார்த்த சிலர் சத்தம் போட்ட நிலையில் வாலிபரை பிடிக்க ஓடி வந்தனர்.

உடனே அந்த வாலிபர் ஓடி சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

இதுகுறித்து டெனிலா குளச்சல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருமண மண்டபம் முன்பு விளையாடிக் ெகாண்டிருந்த சிறுமியிடம் நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story