வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
சிறுவனை கத்தியால் குத்திய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீடாமங்கலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நீடாமங்கலம்:
சிறுவனை கத்தியால் குத்திய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீடாமங்கலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
முன்விரோதம்
நீடாமங்கலம் பெரியக்கோட்டை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி வள்ளி (வயது28). இவரது பக்கத்துவீட்டில் வசித்து வருபவர் மாதவன் என்கிற பிரபாகரன் (30). இவருக்கும், வள்ளிக்கும் இடையே வேலித்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
சிறுவனுக்கு கத்திக்குத்து
இந்த நிலையில் கடந்த 31.1.2020 அன்று பிரபாகரன் நடத்தும் பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்க வள்ளியின் 3-வது மகன் அகிலன் (7) சென்றுள்ளான்.
அப்போது பிரபாகரன், சிறுவன் அகிலனை திட்டி கழுத்தை நெறித்து, கத்தியால் நெற்றி, இடது பக்க கண் அருகில் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
3 ஆண்டுகள் சிறை
இதுகுறித்து வள்ளி கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கு நீடாமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சீதாலெட்சுமி, பிரபாகரனுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.