சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை


சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை
x

ஆத்தூர் அருகே சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஆத்தூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சேலம்

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள முல்லை வாடி ரங்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கீதா. இவர்களுடைய மகள் அருணா (வயது 14). இவள் கடந்த 26.4.2017 அன்று அதே பகுதியில் ஒரு மரத்தில் கயிற்றால் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டு இருந்தார். இதனிடையே முருகனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோவிந்தசாமியின் மனைவி சத்தியா (38) என்பவர் கீதாவிடம் தகராறு செய்து உள்ளார். அப்போது உனது மகளை அடக்கி வைக்க மாட்டியா எனக்கூறி அடுப்பு ஊதும் குழலால் சிறுமி அருணாவின் தலையில் சத்யா ஓங்கி அடித்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அருணா சிகிச்சை பெற்று குணமடைந்தார். இது குறித்து அவரது தாய் கீதா கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சத்யாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்தும் மாஜிஸ்திரேட்டு முனுசாமி தீர்ப்பு கூறினார்.


Next Story