கூட்டுறவு வங்கியில் மோசடி:17 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை


கூட்டுறவு வங்கியில் மோசடி:17 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
x

கூட்டுறவு வங்கியில் மோசடி நடந்தது தொடர்பாக 17 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவையாறு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தஞ்சாவூர்

கூட்டுறவு வங்கியில் மோசடி நடந்தது தொடர்பாக 17 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவையாறு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடன் வழங்கியதில் மோசடி

தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் பூதலூர் கிளையில் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி முதல் 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரை வழங்கப்பட்ட கடன்களில் ரூ.8 லட்சத்து 88 ஆயிரம் மோசடி நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தஞ்சை வணிக குற்றப்புலனாய்வு போலீசில் கூட்டுறவு துணை பதிவாளர் காளிமுத்து புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

17 பேர் மீது வழக்கு

இதில் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட சிவராமன், காசாளர் செல்வநாயகம்(கூட்டுறவு காலனி கிளை), கருணாநிதி(பூதலூர் கிளை), மின் பாதை ஆய்வாளர் கலியபெருமாள், தபால்காரர் ராஜேந்திரன், கிளை தபால் நிலைய அலுவலர் வெங்கடாசலம், மத்திய தானிய சேமிப்பு கிடங்கு காவலர் மணி, அரசுப்பள்ளி அலுவலக உதவியாளர் முத்துசாமி.

இரவு காவலர்கள் இளவரசன், சரவணன், அரசு போக்குவரத்துக் கழக டிரைவர்கள் ராஜ்மோகன், கோவிந்தராஜ், தபால்காரர்கள் சுந்தர்ராஜ், அசோகன், ராஜி, ஆசிரியர் கலியமூர்த்தி, பள்ளி இளநிலை உதவியாளர் சகாய மனோஸ்டின் ஆகிய 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

3 ஆண்டுகள் சிறை

இது தொடர்பாக திருவையாறு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஹரிராம் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது 17 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார். இவர்களில் 14 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் அபராதமும், சிவராமன், செல்வநாயகம், கருணாநிதி ஆகியோருக்கு தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.


Next Story