தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
x
திருப்பூர்

தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி செந்தில் (வயது 37). இவர் கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி, 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொங்குநகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் செந்திலை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. செந்திலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கை சிறப்பாக கையாண்டு புலன்விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பாராட்டினார்.


Next Story