மரப்பட்டறை உரிமையாளரை தாக்கி செல்போன் பறிப்பு 3 வாலிபர்கள் கைது


மரப்பட்டறை உரிமையாளரை தாக்கி செல்போன் பறிப்பு  3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே மரப்பட்டறை உரிமையாளரை தாக்கி செல்போன் பறிப்பு 3 வாலிபர்கள் கைது

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே நைனார்பாளையம் கிராமம், தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் அசோகன்(வயது 44). தியாகதுருகத்தில் சொந்தமாக மரப்பட்டறை வைத்து நடத்தி வரும் இவர் சம்பவத்தன்று இரவு மரப்பட்டறையை பூட்டி விட்டு மோட்டார் சைக்களில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். தோட்டப்பாடி வனகாப்புக்காடு பகுதியில் உள்ள வேகத்தடையில் ஏற்றி இறங்கியபோது 4 மர்ம நபர்கள் அசோகனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த செல்போனை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர்கள் தப்பி சென்ற மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து போய் சாலையோரமாக கிடந்ததை பார்த்த போலீசார் காட்டு பகுதிக்குள் தீவிர வேட்டை நடத்தி அங்கே பதுங்கி இருந்த 3 பேரை கைதுசெய்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் அடரி, வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமார்(21), கள்ளக்குறிச்சியை அடுத்த சூளாங்குறிச்சி காந்தி நகர் ராஜகண்ணு மகன் ராக்பில்லா(19), சின்னசேலம் சிவன் கோவில்தெரு சின்னதுரை மகன் சூர்யா(20) என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மேலும் ஒரு நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story