திருநங்கைகளிடம் சில்மிஷம் செய்த 3 வாலிபர்கள் கைது
திருநங்கைகளிடம் சில்மிஷம் செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரூர் திருக்காம்புலியூர், மண்டிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் திருநங்கைகளிடம் சிலர் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக மாவட்ட போலீசாருக்கு கிடைத்த தகவல்பேரில், போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திருக்காம்புலியூர் சர்வீஸ் ரோடு, மண்டிக்கடை சர்வீஸ் ரோடு, கோவை ரோடு கொங்குமண்டபம் பகுதிகளில் திருநங்கைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக திண்டுக்கல் மாவட்டம், கூடலூர் அருகே உள்ள நொச்சிப்பட்டியை சேர்ந்த ஹரிஹரசுதன் (வயது 24), திண்டுக்கல் மாவட்டம் கொளத்தூர் பட்டியை சேர்ந்த மணிகண்டன் (27), பசுபதிபாளையத்தை சேர்ந்த மனோஜ்குமார் (20) ஆகிய 3 பேரையும் மாவட்ட போலீசார் கைது செய்தனர். இரவு நேரங்களில் மேற்கூறிய இடங்களில் அநாகரியமாக யாரேனும் சுற்றிதிரிந்தால் அவர்களை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.