பத்மநாபபுரம் ஆலயத்தில் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது7 பவுன் நகைகள் மீட்பு


பத்மநாபபுரம் ஆலயத்தில் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது7 பவுன் நகைகள் மீட்பு
x

பத்மநாபபுரம் ஆலயத்தில் நகைகளை கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, 7 பவுன் நகைகளை மீட்டனர்்.

கன்னியாகுமரி

தக்கலை:

பத்மநாபபுரம் ஆலயத்தில் நகைகளை கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, 7 பவுன் நகைகளை மீட்டனர்்.

7 பவுன் நகை கொள்ளை

தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் ஆர்.சி.தெருவில் பரலோக மாதா ஆலயம் உள்ளது, இந்த ஆலயத்தில் கடந்த 30-ந்தேதி அதிகாலையில் புகுந்த மர்மநபர்கள் மாதா சொரூபத்தில் அணிவித்து இருந்த 7 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து ஊர் தலைவர் கிங்ஸ்லி தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

தனிப்படை

இந்த கொள்ளையில் துப்பு துலக்க சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நேற்று காலை 9.30 மணிக்கு புலியூர்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

3 பேர் கைது

அப்போது அவர்கள் களக்காடு, சிதம்பரபுரத்தை சேர்ந்த சதீஷ் (வயது 25), கடையநல்லூர் வேதா கோவில் தெருவை சேர்ந்த நவீன் ஆன்றணி ராஜா (24), ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த வினீத் (20) எனவும் இவர்கள் மூன்று பேரும் மாதா ஆலயத்தில் நகைகளை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 3 ேபர்களையும் போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட 7 பவுன் நகைகளை சதீஷின் வீட்டில் இருந்து மீட்டனர். இந்த 3 பேர் மீதும் திருச்செந்தூர், சுசீந்திரம், தக்கலை பகுதிகளில் பல திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

சிறையில் பழக்கம்

மேலும் இவர்கள் மூன்றுபேரும் நாகர்கோவில் சிறையில் இருக்கும்போது நண்பர்களாகியுள்ளனர். இவர்களுக்கு கஞ்சா பழக்கமும் உள்ளது. மீண்டும் கொள்ளையடிக்க தக்கலைக்கு வந்த போது போலீசாரிடம் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 வாலிபர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளை போன மாதாவின் நகைகள் 3 நாளில் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்த ஊர் மக்கள் தக்கலை போலீஸ் நிலையம் வந்து போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story