3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
தஞ்சை வடக்கு வாசல் பொந்தேரிபாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன். போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்று இருந்த இவர் கடந்த மாதம் வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த கொலை வழக்கு தொடர்பாக பொந்தேரிபாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் ஹரிகரன் (வயது 25), பிருந்தாவனம் சுந்தரபாண்டியன் நகரை சேர்ந்தவர்கள் பாண்டியன் மகன் முத்துக்குமார் (30). பங்கஜ்குமார் (23) ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஹரிகரன், முத்துக்குமார், பங்கஜ்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான உத்தரவினை, சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.