தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
x

காட்பாடி, வேலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

காட்பாடி, வேலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் காட்பாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பால வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சேவூர் பகுதியைச் சேர்ந்த ஆதர் டேவிட்சன் என்கிற டேவிட்சன், சத்துவாச்சாரியை சேர்ந்த மதன்குமார், விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சிபி என்கிற சிபிராஜ் என தெரிய வந்தது. மேலும் இவர்கள் வேலூர், காட்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

3 பேர் கைது

அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 8 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story