30 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


30 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x

30 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் ரகசிய தகவலின் பேரில் ஏழாயிரம்பண்ணை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு வேனில் கடத்தப்பட்ட தலா 40 கிலோ கொண்ட 30 மூடை ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அரிசி உரிமையாளர் கோவில்பட்டியை சேர்ந்த மகாராஜா மற்றும் வேனில் இருந்த டிரைவர் இலுப்பையூரணி கார்த்திக் (வயது 22), சுமைதூக்கும் தொழிலாளிகளான கோவில்பட்டி காந்திநகரை சேர்ந்த மாரிமுத்து (23), சாத்தூர் நள்ளியை சேர்ந்த அருண்குமார் (23) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து மகாராஜாவை தவிர மற்ற 3 பேரையும் கைது செய்தனர். மகாராஜாவை தேடி வருகின்றனர்.


Next Story