இந்து முன்னணியினர் 30 பேர் கைது


இந்து முன்னணியினர் 30 பேர் கைது
x

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவு தலைவர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story