30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

ஏலகிரி மலையில் 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சுற்றுலாத்தலமாக விளங்குவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏலகிரிமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்களை ஒழிக்க ஊராட்சி மன்றம் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பதாக வந்த தகவலின்பேரில் நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கேசவன் தலைமையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது 5 கடைகளில் 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கூறுகையில், ஏலகிரி மலை சுற்றுலா தலமாக இருப்பதால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பொருட்களை விற்ற 5 கடைகளுக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில கடைகளுக்கு பிளாஸ்டிக்களை விற்கக் கூடாது என எச்சரிக்கை அளிக்கப்பட்டது. மீண்டும் சோதனையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் திருமால், ஊராட்சி செயலாளர் பாண்டியன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story